மின்-சஞ்சிகையின் தொனிப்பொருள்

“சமூக பிரச்சினைகளுக்கு எதிராக சமூக பணியின் தலையீடு”

கையெழுத்து பிரதியைச் சமர்ப்பித்தல்

சமூக பணி தேசிய நிறுவகத்தின் 2017 மின்-சஞ்சிகை ஆசிரியருக்கு மூன்று பிரதிகளை தபால்மூலம் அனுப்ப வேண்டும் அல்லது நேரடியாகக் கையளிக்க வேண்டும். அத்துடன் அதன் மென் பிரதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு,
*(இரண்டு பிரதிகள் ஆசிரியர்களின் பெயர் முகவரிகள் இன்றி) 2017 மே 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்படுதல் வேண்டும்.

கையெழுத்து பிரதியைத் தயாரித்தல்

ஆக்கங்கள் A4அளவு தாளில் கணினி (word processed) தட்டச்சு செய்யப்படுதல் வேண்டும். எழுத்து ஆங்கிலம் Times New Roman, சிங்களம் FMAbhaya தமிழ் பாமினி (Bamini).

கட்டுரையின் தரம்

  • வரிகளுக்கு இடையில் - இரட்டை இடைவெளி
  • ஓரம் - ஓரம் 1' (அங்குலம்) இருக்க வேண்டும்
  • எழுத்து அளவு - தலைப்பு (எழுத்து - 14 தடித்த கறுப்பு எழுத்து)
  • கருத்து (எழுத்து - 11 சாதாரணம்)
    ஒவ்வொரு கையெழுத்து பிரதியுடன் கருத்து இணைக்கப்படுதல் வேண்டும். கருத்து 250 சொற்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். அத்துடன் முழுமையாக சுயமாகத் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். கருத்தின் இறுதியில் பிரதான 5 குறிப்புச் சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (எழுத்து - 11 / சாய்வெழுத்து)
  • பிரதான பகுதி (எழுத்து - 12 சாதாரணம்)
    கட்டுரையின் பிரதான பகுதி (பாடமும் பேச்சு மொழியும்) பிரிவுத் தலைப்பு மற்றும் துணை தலைப்பு என்றவகையில் பயன்படுத்தி பிரிவுகளாகப் பிரிக்கப்படுதல் வேண்டும்.
    • பிரதான தலைப்பு (எழுத்து - 12 தடித்த கறுப்பு எழுத்து)
      இடதுபக்க ஜஸ்டிபையிங் தலைப்பு, எல்லாம் பெரிய எழுத்துக்கள் அவற்றின் முன்னால் அரபி இலக்கங்களும் புள்ளிகளும்.
      • முதலாவது துணை தலைப்பு (எழுத்து - 12 தடித்த கறுப்பு எழுத்து)
        இடதுபக்க ஜஸ்டிபையிங் தலைப்பு, முதல் எழுத்து பெரிய எழுத்து, அவற்றின் முன்னால் அரபி இலக்கங்களும் அவற்றைத் தொடர்ந்து புள்ளிகளும் இலக்கங்களும்.
    • இலக்கமிடல் எடுகோள், படங்கள் மற்றும் அட்டவணைகள்
      அட்டவணைகளும் படங்களும் அரபிக் இலக்கத்தில் இலக்கமிடப்பட வேண்டும். (1,2,3 போன்றவகையில்) (அ), (ஆ), (இ) போன்ற வகையில் படங்களின் பகுதியை லேபல் இடவும்.
    • சமன்பாட்டு இலக்கமிடல்
      சமன்பாடுகள் அடைப்புக் குறிகளுக்குள் அரபிக் இலக்கங்களுடன் இலக்கமிடப்பட வேண்டும். (1), (2), (3) போன்றவகையில்.
    • சுருக்கங்கள், அலகுகள், வாய்ப்பாடுகள்
      தரமான குறிப்புகளையும் அடையாள குறிகளையும் பயன்படுத்துதல்.
  • முடிவுகள்
    ஆய்வு வேலைகளின் சுருக்கத்தைத் தவிர்த்து முடிவுகள் அல்லது எடுகோள்கள் என்பவற்றை பொறுப்பேற்ற ஆய்விலிருந்து வரைதல்.
  • அடிக்குறிப்புகள் (எழுத்து - 10 சாதாரணம்)
    அடிக் குறிப்பை லேபல் இடுவதற்கு அ, ஆ, இ போன்ற அடிக்குறிப்பு எழுத்துக்களைப் பயன்படுத்தவும். கட்டுரையின் அடிக்குறிப்பை குறிப்பிடுவாற்கு வெளியே எழுதும் எழுத்துக்களைச் சேர்ப்பதன்மூலம் அடிக்குறிப்பைக் காட்ட முடியும்.
  • எடுகோள்கள்
    எடுகோள் தகவல் எளிமையாக இருக்க வேண்டும். இயலுமானளவு தகவல்களை உள்ளடக்கியிருக்க வேண்டும். அது கட்டுரையில் ஆசிரியரின்/ ஆசிரியர்களின் பெயரில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அடைப்புக் குறிக்குள் வெளியிட்ட வருடம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
    உதா: i ரெட்மன் நவ et al., (2006)
    உதா: ii ரெட்மன் (2006) மற்றும் கோர்மெக் (2008)

ஆய்வு கட்டுரைகள்

சஞ்சிகை ஆக்கங்களுக்கு எடுகோளுக்காகத் தேவைப்படும் கூறுகள் வருமாறு:

ஆசிரியர், முதலெழுத்துக்கள், வருடம். கட்டுரையின் தலைப்பு, சஞ்சிகையின் ழுமு கட்டுரை தலைப்பு, மலர் இலக்கம் (விநியோக/பகுதி இலக்கம்), பக்க இலக்கங்கள்.

உதா: எடம், டீ.ஜே., 2003, பங்கீடுபாட்டாளர் பகுப்பாய்வு இன்று. முகாமைத்துவத்தின் ரோயல் சஞ்சிகை, 42(7), pp.34-66.

புத்தகங்கள்

உசாத்துணை விபரங்களுக்கு புத்தகத்தின் மேலட்டையை அல்ல தலைப்பு பக்கத்தைப் பயன்படுத்துதல். ஒரு புத்தக எடுகோளுக்கான தேவைப்படும் கூறுகள் வருமாறு:ஆசிரியர், முதலெழுத்துக்கள்/ முதற் பெயர், வருடம். புத்தகத்தின் தலைப்பு, பதிப்பு. (முதற் பதிப்பாக இல்லாவிட்டால் மாத்திரம் இதை சேர்க்கவும்) இடம்: வெளியீட்டாளர். உதா: பரொன், டேவிட் பி., 2008. வியாபாரம் மற்றும் நிறுவனம். 6வது ஈடி.செஸ்டர் (சிடி): பியர்சன்.

சஞ்சிகை ஆக்கங்களுக்கு எடுகோளுக்காகத் தேவைப்படும் கூறுகள் வருமாறு:

ஆசிரியர், வெளியீட்டு வருடம். ஆய்வேட்டின் தலைப்பு, மட்டம். பல்கலைக்கழகம் உள்ள இடம்(பல்கலைக்கழகத்தின் பெயர் தெளிவாக இல்லாவிட்டால்) பல்கலைக்கழகத்தின் பெயர்:

உதா: றிச்மன்ட், ஜே., 2005. இலத்திரனியல் வங்கி நடைமுறை உலகில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள்: பிரித்தானிய வங்கியின் சம்பவக் கற்கை. Ph.D.செம்ஸ்போர்ட்: அங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகம்.

இலத்திரனியல் ஆவணம்

இணையத்தளத்தில் அணுகுவதற்கு : ஆசிரியர்பற்றிய விபரம் அல்லது மூலம், வருடம், இணையத்தள ஆவணத்தின் தலைப்பு அல்லது இணய பக்கம் ஆகிய கூறுகள் அவசியம்.

(மொழிமூலம்) கிடைக்கும் இடம்: இணையத்தள முகவரி உட்பட/ URL (இணைய) முகவரி மற்றும் மூலத்தின் முகப்பு பக்கத்திலிருந்து வழிச்செயலுக்கு அல்லது அணுகுமுறை போன்ற மேலதிக விபரங்கள் கிழைடக்கும். (அணுகிய திகதி)

உதா: நீங்கள் பயன்படுத்துகின்ற இணைய பக்கத்தின் முன் பக்கத்தின் பிரதியை வைத்துக்கொள்ளுவது நல்ல பழக்கமாகும்.

எடுகோள் வழிகாட்டியின் மேலதிக விபரங்களுக்கு இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்: http://www.library.nhs.uk/guidelinesfinder>(Accessed10August2010)

ஆசிரியர்
மின்-சஞ்சிகை
சமூக அபிவிருத்தி கொள்கை, ஆய்வு மற்றும் வெளியீடுகள்,
சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்.

+94 112 368 180
+94 112 368 180

director general

டாக்டர். ரிட்லி ஜயசிங்கபணிப்பாளர் நாயகம்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க

b dumy

திருமதி. ஷாமிணி அத்தனாயக்கமேலதிக பணிப்பாளர் நாயகம்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க

g dumy new

 பணிப்பாளர்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க

b dumy

 ஆசிரியர்சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகம்

செய்தியை பார்க்க