தூரநோக்கு

சமூக பணி கல்வி, பயிற்சி மற்றும் ஆய்வு ஆகியவற்றில் உலக ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் சிறந்த நிலையமாகத் திகழ்தல்.

பணிநோக்கு

அனைத்து மட்டங்களிலும் சமூக பணியில் திறமை மிக்க ஆளணி வலுவை தயாரிப்பதன் ஊடாக சமூக அபிவிருத்திக்கான மனித வளங்களை மேம்படுத்துதல். சமூக பணிகளை செயற்படுத்துவதற்கு புதிய அறிவையும் தொழல்நுட்பத்தையும் உருவாக்கி பரப்புதல், சமூக அபிவிருத்திக்கும் சமூக நலனோம்பலுக்கும் நிபுணத்துவ சேவைகளை வழங்குதல்.

நிறுவனத்தின் வரலாறு

முன்னணி பிரசைகள் சிலர், சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் சிலர் ஒன்றிணைந்து இலங்கை சமூக பணிகள் நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு எடுத்த முயற்சியின் விளைவாக 1952ஆம் ஆண்டு சமூக பணிகள் கல்வி நிறுவனம் என்ற இந்த முன்னோடி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் இலங்கை சமூக பணி பாடசாலை என மீள் பெயரிடப்பட்டு 1964ஆம் ஆண்டு சமூக பணியில் டிப்ளோமா பாடநெறிகளை ஆரம்பித்தது.

1987ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இலங்கை சமூக பணி பாடசாலை ஒரு சுயாதீன நிறுவனமாகத் தரமுயர்த்தப்பட வேண்டும் என அறிவித்தது. சமூக பணியில் உயர் கல்வியை வழங்கும் பொருட்டு 1989ஆம் ஆண்டு சமூக அபிவிருத்தி தேசிய நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்தது. அத்துடன் இந்த பாடசாலை தரமுயர்த்தப்பட்டு 1992ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க சட்டத்தின் மூலம்  சமூக அபிவிருத்தி தேசிய நிறுவனம் என்ற பெயரில் பாராளுமன்ற சட்டத்தின்மூலம் சமூக அபிவிருத்தி தேசிய நிறுவனம் என மீள் பெயரிடப்பட்டது.

சமூக பணியில் இளமானிப் பட்டப்படிப்பை ஆரம்பிப்பதற்காக உள்ளூர் பல்கலைக்கழகத்துடன் கூட்டிணைவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்வைத்த கருத்தைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ச.அ.தே. நிறுவனத்திற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை (MoU) கைசாத்திடப்பட்டது.

2005ஆம் ஆண்டு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் மீது, 2005 யூன் 01ஆம் திகதியிட்ட 1395/15ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியில்  வெளியிடப்பட்ட 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ பிரிவின் கீழ் உள்ள கட்டளைப்படி சமூக பணியில் இளமானி பட்டம் அளிக்கும் உயர் கல்வி நிறுவனமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் சமூக அபிவிருத்தி தேசிய கல்வி நிறுவனத்தை பட்டமளிக்கும் நிறுவனமாகப் பிரகடனப்படுத்தியது. இந்த சமூக பணி இளமானி பட்டப்படிப்பு 2005 டிசம்பர் மாதம் ஆரம்பமானது.

பல்கலைககழக மானியங்கள் ஆணைக்குழு சமூக பணியில் முதுமானிப்பட்டத்தை அங்கீகரித்து இலங்கை அரசாங்கத்திடம் அனுமதியளிக்கும்படி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முன்னைய (வர்த்தமானி) கட்டளையை இரத்துச்செய்து 2008 யூலை 07ஆம் திகதியிட்ட 1557/7ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியில்  வெளியிடப்பட்ட 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ பிரிவின் கீழ் உள்ள கட்டளைப்படி சமூக பணியில் முதுமானி பட்டம் அளிக்கும் உயர் கல்வி நிறுவனமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் சமூக அபிவிருத்தி தேசிய கல்வி நிறுவனத்தை பட்டமளிக்கும் நிறுவனமாகப் பிரகடனப்படுத்தியது.

இலங்கையில் முதன் முதலாக சமூக பணயில் முதுமானி பட்டப்படிப்பு நிகழச்சித்திட்டம் கனடா சர்வதேச அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (CIDA) அனுசரணையின் கீழ், சமூக சேவைகள் மற்றும் சமூக நலனோம்பல் அமைச்சுடன் கூட்டிணைந்து கனடா, கிங்ஸ்டன், குயீன்ஸ் பல்கலைக்கழகத்தினால் அமுல்படுத்தப்பட்டது. 2008 செப்டம்பர் மாதம், இந்த மட்டக்குறி நிகழ்வைப் பின்பற்றி, சமூக பணியியில் PhD நிகழச்சித்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கனடா, கிங்ஸ்டன், குயீன்ஸ் பல்கலைக்கழகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவைப்பற்றி கலந்துரையாடுவதற்கு  ச.அ.தே. நிறுவனம் ஆரம்ப கூட்டத்தை நடத்தியது. இந்த முன்மொழிவைப்பற்றி பலசுற்றுகளாக ஆராய்ந்ததன் பின்னர் ச.அ.தே நிறுவனத்தில் மனித வளங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஐந்தாண்டு திட்டமொன்றை முதலில் வரைவதற்கு ஆளுகை பேரவையினால் திட்டமிடல் குழுவொன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதன் ஆரம்பத்திலிருந்து, சமூக பணி இளமானிப் பட்டப்படிப்பு ஆங்கில மொழிமூலம் மாத்திரம் நடத்தப்பட்டது. மேலும் சமூக பணி பாடநெறி டிப்ளோமா, உயர் டிப்ளோமா, இளமானி பட்டப்படிப்பு ஆகியவற்றை தமது தாய் மொழியில் கற்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பதற்காக 2013ஆம் ஆண்டு இப்பாட நெறிகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டன.

செய்தி மற்றும் நிகழ்வுகள்