பணியாட் தொகுதியினரதும் பட்டதாரி மாணவர்களினதும் தகவல் தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்காக சமூக பணி அபிவிருத்தி தேசிய நிறுவகத்தில் கணினி கூடமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சமூக பணி அபிவிருத்தி தேசிய நிறுவக சமூகத்திற்காக தரமான தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்காக கணினி கூடம் தற்பொழுது சிறந்த பௌதிக வளங்களைக் கொண்டுள்ளது. கணினி கூடத்தில் உள்ள அனைத்து கணினிகளும் வலையமைப்புக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு இணைய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. கணினி கூடம் வளிச்சீராக்கப்பட்டுள்ளதோடு வசதியான தளவாடங்கள் இடப்பட்டுள்ளன. அத்துடன் கணினி தொடர்பான நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கணினி கூடம் பணியாட் தொகுதியினரும் மாணவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் 3வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு மாணவர்கள், உயர் டிப்ளோமா, டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றுக்கான தகவல் தொழில்நுட்ப பாடங்களைப் படிப்பிக்கின்றது. ஒவ்வொரு பாட முடிவிலும் கணினி கூடம் பரீட்சைகளை நடத்துகின்றது.

செய்தி மற்றும் நிகழ்வுகள்