libraryசமூக பணி அபிவிருத்தி தேசிய நிறுவகம் 25,000க்கு மேற்பட்ட வெளியீடுகளைக் கொண்டிருக்கிறது. சமூக பணியுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள்பற்றிய அண்மைக்கால வெளியீடுகள் பலவற்றைக் கொண்டுள்ள இலங்கையின் மிகப்பெரிய நூலகமாக இந்த நூலகம் திகழ்கிறது.

சமூக பணி நிகழ்ச்சித்திட்டத்தில் இளமானி பட்டப்படிப்பு, முதுமானி பட்டப்படிப்பு, சமூக பணி மற்றும் உளவளத்துணை நிகழ்ச்சித்திட்டத்தில் டிப்ளோமா/ உயர் டிப்ளோமா பாடநெறிக்குப் பதிவுசெய்துள்ள மாணவர்களுக்கும் பீடத்தில் உள்ள மாணவர்களுக்கும் இந்த நூலகம் அங்கத்துவம் அளிக்கிறது. இரவல் கொடுக்கும் பிரிவும் உசாத்துணை பிரிவும் இயங்குகின்றது.

இந்த நூலகம் 5ஆம் மாடியில் அமைந்துள்ளது. நூலகம் வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.15மணி வரையும் வார இறுதி நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையும் திறந்திருக்கும். முதலாவது கல்வி ஆண்டு ஆரம்பமாகின்றபோது நூலக கட்டணங்களையும் மீளச் செலுத்தும் பதிவுக் கட்டணங்களையும் செலுத்தும் மாணவர்களுக்கு நூலக அட்டை வழங்கப்படும். போட்டோ பிரதியெடுக்கும் சேவையும் உண்டு. குறித்த கட்டணங்களைச் செலுத்தி அங்கத்துவம் பெறுகின்ற மாணவர்களுக்கு இணைய வசதிகளும் உண்டு.

செய்தி மற்றும் நிகழ்வுகள்