சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகத்தின் நிர்வாக கட்டமைப்பு சமூக அபிவிருத்தி கொள்கை, ஆய்வு மற்றும் வெளியீட்டு பிரிவின் ஒருங்கிணைக்கப்பட்ட ஆக்கக்கூறுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இது ஆய்வு கருத்திட்டங்களுடன் ஒருங்கிணைந்து சமூக அபிவிருத்தி உள்ளிட்ட சமூக வலுவூட்டல், சமூக நலனோம்பல், சமூக பணி கல்வி மற்றும் நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் என்பவற்றை நடத்துகிறது.

இந்த பிரிவு தேசிய மட்டத்தில், கிராம மட்டத்தில் மற்றும் நகர மட்டத்தில் கொள்கை அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல ஆய்வு கருத்திட்டங்களைப் பொறுபேற்றுள்ளது. மேலும், இந்த பிரிவு மதிப்பீட்டு சஞ்சிகை மற்றும் செய்திக் கடிதம் உள்ளிட்ட 6 வருடாந்த வெளியீடுகளை வெளியிடுகிறது. வெளியீட்டுக்காக கருத்தியல் கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதும்படி சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகத்தின் கல்விசார் பணியாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளுகிறேன்.

குறிக்கோள்

தற்கால மற்றும் எதிர்கால துறைகள் சம்பந்தமாக புதிய அறிவை உற்பத்திசெய்கின்ற அதேவேளையில், சமூக அபிவிருத்தி மற்றும் சமூக நலனோம்பல், செயற்பாடுகள் சமூக பணி கல்வி என்பவற்றின் பல்வேறு நோக்குடன் சம்பந்தப்பட்ட ஆய்வு பணிகளுடன் கூட்டிணைதல், மேம்படுத்துதல் மற்றும் முன்னெடுத்தல்.

நோக்கம்

  • ஆய்வின் ஊடாக சமூக உறவுகள் மற்றும் சமூக முரண்பாடுகள், சமூக கட்டமைப்பு, என்பவற்றில் சமூகத்தில் அறிவை உருவாக்குதல் மற்றும் உற்பத்திசெய்தல்.
  • சமூகத்தின் பல்வேறு நோக்குகளின் ஆக்கபூர்மான மற்றும் எதிர்மறையான தகவல்களைச் சேகரித்தல்.
  • சமூக பணிகள் துறையில் இருக்கின்ற கல்வி புகட்டுகின்றவர்களுக்கு புதிய அறிவை வழங்குதல்.

வெளியீடுகள்

  • வருடாந்த செய்திக் கடிதம் - 2011, 2012, 2014, 2015, 2016
  • சமூக பணி இலங்கை சஞ்சிகை - 2011, 2015, 2016
  • வருடாந்த பீட வெளியீடு - 2014
  • சமூக அபிவிருத்தி இலங்கை சஞ்சிகை - 2016
  • இலங்கையின் சமூக அபிவிருத்தி மற்றும் நலனோம்பல் பற்றிய கட்டுரை - முதல் வெளியீடு 2002ஆம் ஆண்டு.(ஆசிரியர்- டீ. சந்திரரத்ன)
  • வெலிக்கடை பற்றிய சொல்லப்படாத கதை. “சிறைக் கைதிகளின் மறக்கப்பட்ட குடும்பங்கள்” - 2007
  • சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை கருத்து “சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளை நோக்கிய குடும்ப சமூக பணி தொடர்பான மகாநாடு” - 2010

ஆய்வு

  • இலங்கையில் வடுபடத்தக்க குடும்பங்கள் - ஒரு சம்பவக் கற்கை - 2009
  • இலங்கையில் அபிவிருத்தி பிரச்சினைகளும் உலர்வலய கிராமங்களின் உள்ளார்ந்த ஆற்றலும் - 2011
  • பங்கேற்பு கிராமிய மதிப்பீடு (PRA) - அனுராதபுரத்தில் பிரபோதகம கிராமம்” - 2012
  • பங்கேற்பு கிராமிய மதிப்பீடு (PRA) - அனுராதபுரத்தில் அளபத்கம கிராமம்” - 2012
  • இலங்கையில் சிறுவர்களின் நிறுவன பராமரிப்பு சம்பவ பகுப்பாய்வு - 2015
  • அம்பாந்தோட்டை கிராம மற்றும் மீன்பிடி பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட இரண்டு கிராமங்களில் ஒப்பீட்டு ஆய்வு கற்கை - 2016
  • அரச உதவிக்கான ஏற்பாடுகள் மீதான தேவைகளையும் சவால்களையும் அடையாளம் காண்பதுபற்றிய ஆய்வு கற்கை - 2015/ 2016
  • பொது போக்குவரத்தில் ஏற்படும் தொல்லைகளுக்கு பதிலளிப்பதற்கு உள்ள ஆற்றல்இ வடுபடும் தன்மை மற்றும் இடர்காப்பின்மைபற்றிய ஆய்வு கற்கை - 2016
  • சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பல் அமைச்சின் கீழ் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படுகின்ற வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் வினைத்திறன் - 2016
  • சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகத்தின் கல்விசார்இ பயிற்சி மற்றும் ஆய்வு நிகழ்ச்சித்திட்டத்தின் மீது தேவை மதிப்பீட்டு ஆய்வு - 2016
  • இலங்கையில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நாடகத்தின் ஊடாக குடும்ப கட்டமைப்பை மாற்றுதல்: தொலைக்காட்சி இரசிகர்கள் பற்றிய ஒரு பகுப்பாய்வு - 2016
  • நீண்ட நாட்களாக கடுமையான சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான நலனோம்பல் மூலோபாயங்களை அபிவிருத்தி செய்வது பற்றிய ஓர் ஆய்வு (CKDU) - 2016/ 2017

செய்தி மற்றும் நிகழ்வுகள்