2004ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பயிற்சிப் பிரிவு, சமூக பணி தேசிய கல்வி நிறுவகத்தின் நிறுவன கட்டமைப்பின் ஒருங்கிணைக்கப்பட்ட நான்கு ஆக்கக்கூறுகளில் ஒன்றாகும். இது இப்பிரிவின் பணிப்பாளரின் கீழ் இயங்குகிறது. தற்பொழுது I ஆம் தர பயிற்சி உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் II ஆம் தர பயிற்சி உத்தியோகத்தர்கள் ஒன்பதுபேர் இப்பிரிவில் சேவையாற்றுகின்றனர்.

சமூக வலுவவூட்டல், நலனோம்பல் மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சிலிருந்து மாத்திரமல்ல  அபிவிருத்தி துறையில் ஈடுபட்டுள்ள ஏனைய நிறுவகங்களிலிருந்தும் இந்த தொனிப்பொருடன் சம்பந்தப்பட்ட பயிற்சிக்கான புதிய கோரிக்கைகள் பெருகிவந்ததன் காரணமாக, சமூக வலுவூட்டல், நலனோம்பல் மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சினால் அனுப்பப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் பணியாட் தொகுதியினருக்கு/ சேவை பெறுநர்களுக்கு பயிற்சியளிப்பதில் இப்பிரிவு ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்தது. இவற்றைவிட, சமூக அபிவிருத்தி தேசிய கல்வி நிறுவகத்திற்கு வெளியில் உள்ளவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கு புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. சமூக அபிவிருத்தி தேசிய கல்வி நிறுவகத்தினால் வெளியில் உள்ளவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களாக இவை அடையாளம் காணப்பட்டன. அதன்போது, சேவை பெறுநர்களுக்கு அவர்களின் பிராந்திய அமைவிடங்களில் பயிற்சிகளை நடத்துவதற்கு பயிற்சி பிரிவு உடன்பட்டது.

இந்த பிரிவின் நோக்கம் வருமாறு,

  • தொடர்புபட்ட துறைகளிலும் வேறுபட்ட துறைகளிலும் பயிற்சித் தேவைகளை அடையாளம் காணுதல்.
  • நாட்டின் பயற்சித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனித வளங்களுக்குப் பயிற்சியளித்தல்.
  • தேவை மதிப்பீடுகளின் ஊடாக கொடுக்கக்கூடிய பயிற்சி வகைகளை அடையாளம் காணுதல்.
  • சேவை பெறுநரின் தேவைக்கேற்ப பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைத்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் அமுலாக்குதல்.
  • நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பொருந்தக்கூடிய வகையில் பாடத்திட்டத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேம்படுத்துதல்.
  • பயிற்சிப் பிரிவினால் நடத்தப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை இற்றைப்படுத்துதல்.

சமூக அபிவிருத்தி தேசிய கல்வி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட பல்வேறு அனுசரணையளிக்கப்பட்ட உள்ளக மற்றும் வெளிவாரி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும் உளவளத் துணை டிப்ளோமா பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும். அது நீண்ட கால மற்றும் குறுகியகால மற்றும் அநேகமான தொழில்சார் பாடநெறிகளுடன் இணைந்த பாடநெறிகளையும் நடத்துகிறது. அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றிக் கோரிக்கைகளுக்கு அமைவாக பல பாட விடயங்களில் குறுகிய கால பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.

நீண்டகால பயிற்சிகள்

  • உளவளத்துணையில் உயர் டிப்ளோமா (21 மாதங்கள், சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம்)
  • உளவளத்துணையில் டிப்ளோமா (21 மாதங்கள், சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம்)
  • முதியவர்கள்/ மூத்தோர் கவனிப்பு டிப்ளோமா (21 மாதங்கள், சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம்
  • சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா (18 மாதங்கள், சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம்)
  • சமூக கவனிப்பில் டிப்ளோமா (21 மாதங்கள், சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம்)
  • சமூக அடிப்படையிலான சரிசெய்தலில் டிப்ளோமா (21 மாதங்கள், சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம்)
  • சமூக பணியில் சான்றிதழ் பாடநெறி (6 மாதங்கள், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலம்)
  • சிறுவர் மீது கவனம் செலுத்துகிற சமூக அபிவிருத்தி சான்றிதழ் பாடநெறி (6 மாதங்கள், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலம்)
  • உளவளத்துணை சான்றிதழ் பாடநெறி (6 மாதங்கள், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலம்)

குறுகியகால பயிற்சி நெறிகள்

  • அடிப்படை உளவளத்துணை
  • சமூக பணி தலையீடு
  • மன அழுத்த முகாமைத்துவம்
  • முரண்பாட்டு முகாமைத்துவம் மற்றும் சமாதான கல்வி
  • சிறுவர் அபிவிருத்தி, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலிய குற்றங்கள்
  • கருத்திட்ட முன்மொழிவுகளை எழுதுதல்
  • அனர்த்த முகாமைத்துவம்
  • வீட்டை அடிப்படையாகக்கொண்ட வளரிளம் பருவ அபிவிருத்தி
  • தலைமைத்துவ மற்றும் தொடர்பாடல் திறன்கள்

தொழில் நிபுணத்திற்கு அப்பாற்பட்ட பாடநெறிகள்

  • சமூக அடிப்படையிலான அமைப்புகளின் உத்தியோத்தர்களுக்கும்( CBOO) மற்றும் அரச சார்பற்ற (NGO) அமைப்புகளுக்கும் திறன் விருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

செய்தி மற்றும் நிகழ்வுகள்