சமூக பணி பாடசாலை ச அ தே நிறுவகத்தின் பழைய மற்றும் மிகப்பெரிய பிரிவாகும். அது சமூக பணியில் தொழில்சார் பட்டப்படிப்பை நடத்துகிறது. தற்பொழுது அது நாட்டில் உயர்ந்த எண்ணிக்கையிலான பட்டப்பின்படிப்பு மட்டத்தில் தகுதிவாய்ந்த சமூக பணி கல்விமான்களைக் கொண்டுள்ளது.

தற்பொழுது இந்த நிறுவகத்தின் சமூக பணி பாடசாலையில் பின்வரும் கல்விசார் நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவையாவன,

  • சமூக பணியில் முதுமானி பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டம் (2 வருடம், வார இறுதி, ஆங்கில மொழிமூலம்)
  • சமூக பணியில் இளமானி பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டம் (4 வருடம், வார நாட்கள், ஆங்கில மொழிமூலம்)
  • சமூக பணியில் டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டம் (2 வருடம், வார நாட்கள், சிங்கள, தமிழ், ஆங்கில மொழிமூலம்)
  • சமூக பணியில் டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டம் (1 வருடம், வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள், சிங்கள, தமிழ், ஆங்கில மொழிமூலம்)
  • பெண்கள் வலுவூட்டல் டிப்ளோமா (1 வருடம், வார இறுதி, சிங்கள, தமிழ், மொழிமூலம்)
  • அடையாள குறி மொழி டிப்ளோமா உரைபெயர்ப்பு (1 வருடம், வார இறுதி, சிங்கள மொழிமூலம்)

சமூக பணி பாடசாலை சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகத்தின் முற்பதவியாளராக இருக்கிறது. இது அரச சார்பற்ற நிறுவனம் என்ற வகையில் சமூக பணி நிறுவனம் என்ற பெயரின் கீழ் 1952ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இது அரச நிறுவனமானபோது 1964ஆம் ஆண்டு இலங்கை சமூக பணி பாடசாலை எனப் பெயரிடப்பட்டது. இந்த பாடசாலைக்கு 1972ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சமூக பணி பாடசாலை என மீளப் பெயரிடப்பட்டது. சமூக பணியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு பட்டங்களை வழங்குவதற்காக இந்த பாடசாலை சமூக அபிவிருத்தி தேசிய நிறுவகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் மீது ஒரு சுயாதீன நிறுவகமாக ஸ்தாபிக்கப்பட்டது.

செய்தி மற்றும் நிகழ்வுகள்